கோடைகாலம் துவங்கிய நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வருடா வருடம் நடைபெறும் கோடைகால சிறப்பு தீனியாத் வகுப்பு தற்பொழுது அதிரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல பகுதியில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த கோடைகால சிறப்பு வகுப்பிற்கு அனுப்பிவைத்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோடைகால வகுப்பு ஆண்களுக்கு நடைபெறும் இடம் :
1) சித்திக் பள்ளி
2) மரைக்கா பள்ளி
3) புது பள்ளி
4) AJ பள்ளி
கோடைகால வகுப்பு பெண்களுக்கு நடைபெறும் இடம் :
1) மக்தப் ஹிதாயத்துல் இஸ்லாம் ரஹ்மானியா பள்ளி அருகாமையில் கிட்டங்கி தெரு
2) ஆலடித்தெரு இத்ரீஸ் மௌலானா அவர்கள் வீட்டு அருகாமையில் நடைபெறுகிறது
3) சித்திக் பள்ளி பின்புறம் உள்ள பெண்கள் மதரசாவில் நடைபெறுகிறது
4) மிஸ்கின் பள்ளி பின்புறம் உள்ள பெண்கள் மதரசா ராஷித்தில் நடைபெறுகிறது
5) புதுப்பள்ளி மஹல்லா அபூபக்ர் (ரலி) சந்தில் உள்ள மத்ரஸதுல் பனாத்
6) சின்ன நெசவு தெரு மரைக்கா பள்ளி கபுர்ஸ்தான் பின் புறம் உள்ள துவர் பாக்கு வீட்டு பக்கத்தில் நடைபெருகிறது
I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?