அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (WSA) மற்றும் வெஸ்டர்ன் கால்பந்து கிளப் இணைந்து நடத்தும் 15-ஆம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் (State Level 7’s Tournament), நாளை (17.07.2026, வெள்ளிக்கிழமை) மாலை 04:30 மணிக்கு அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான NMS குடும்பத்தார்கள் வக்ஃபு வெஸ்டர்ன் மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக துவங்க உள்ளது.
“போதை இல்லா இளைஞர்கள்… ஒற்றுமையான சமூகம்… அதற்கான முதல் படி – கால்பந்து” மற்றும் “போதைக்கு எதிராக அணிவகுப்போம்” (Say No to Drugs) என்ற உன்னத சமூக விழிப்புணர்வு நோக்கோடு இப்போட்டி நடத்தப்படுகிறது.
நுழைவுக் கட்டணம் ஏதுமில்லாமல் (No Entry Fee) நடத்தப்படும் இத்தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ₹50,015, இரண்டாம் பரிசாக ₹30,015, மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ₹20,015 மற்றும் ₹10,015 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இத்தொடரின் துவக்க விழாவில் அதிரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் வெஸ்டர்ன் கால்பந்து கிளப் நிர்வாகிகள் அன்போடு அழைக்கின்றனர்.
கூடுதல் விபரங்களுக்கு
+91 63823 11594,
+91 82207 01853,
+91 81241 35318
ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.





