அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலிய்யத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா

வருகின்ற 10.09.2022 ஸஃபர் 14 ஹிஜ்ரி 1444, சனிக்கிழமை அன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை நமதூர் ஜாவியாவில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் முதல் அமர்வு நேரம் : 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். கிராஅத் அரங்கம் நிகழ்ச்சிகளை துஆவுடன் இனிதே துவக்கி வைப்பவர்கள் மௌலானா மௌலவி ஹழ்ரத் கிப்லா K.T.முஹம்மது குட்டி தாமத்பரகாத்துஹும் அவர்கள் (முதல்வர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி, அதிராம்பட்டிணம்)

தலைமை: ஹாஜி கோட்டை அமீர் M.B.அபூபக்கர் அவர்கள்.
முன்னிலை : ஹாஜி T.A.ஷேக் அலி மரைக்காயர் அவர்கள். (பொருளாளர் அ.ஜா.ஷா.பாஸி)

வரவேற்புரை : ஹாஜி S.M.S.அஸ்லம் அவர்கள். (அ.ஜா.ஷா.பாஸி தலைவர்)
S.அப்துல் அஜீஸ் அவர்கள். (செயலாளர் அ.ஜா.ஷா.பாஸி)

கிராஅத் அரங்க நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர் : ஹாபிழ் காரி, மௌலானா மௌலவி A.சித்தீக் அலி பாகவீ அவர்கள். (தலைமை இமாம், மஸ்ஜிதே அஷ்ரஃப், மண்ணடி, சென்னை-1.)

கீதம் : M.F.முஹம்மது இக்பால் ஷாதுலி, அவர்கள் (மஸ்ஜிதே அஷ்ரஃப், மண்ணடி, சென்னை-1)

சிறப்பு கிராஅத் : மௌலானா ஹாபிழ் காரி, பாபா முஹ்யித்தீன் அவர்கள், (பேராசிரியர் மதரஸா ஷரஃபிய்யா, ஹைதராபாத்)

மௌலானா ஹாபிழ், காரி, சுஹைல் அஹ்மது காஸிமீ, அவர்கள் (பேராசிரியர் மதரஸா மஃஹதுல் உலூம், பலமனேரி, ஆந்திரா)

பங்கேற்கும் இளம் காரிகள் : A.அனீஸுர் ரஹ்மான், B.ராஹில் ஹுஸைன், முஹம்மது ஷபீக், முஹம்மது அஃப்வான், முஹம்மது ஆஷிக்

இரண்டாம் அமர்வு நேரம்: மாலை 3.00 மணிமுதல் 6.00 மணிவரையில்

காயல்பட்டிணம், மதுரை, கூத்தாநல்லூர், புத்தா நத்தம், அம்மாபட்டிணம், நீடூர் ஆகிய ஊர்களிலிருந்து ஷாதுலிய்யா, தரீக்காவின் கலிபாக்கள் மற்றும் உலமாக்களும் உமராக்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார்கள் கண்மணி நபி (ஸல்) அவர்களின் சுப்ஹான மவ்லிது மஜ்லிஸீம் ஹஜ்ரத் அபுல் ஹஸன் ஷாதுலி (ரலி) அவர்களின் மவ்லிது மஜ்லிஸீம் சிறப்பாக நடைபெறும்.

மூன்றாம் அமர்வு நேரம்: 6.30 மணிமுதல் 9.30 மணிவரை மௌலானா மௌலவி. முஹம்மது முஸ்தபா (தலைமை இமாம் ஜாவியா) அவர்களின் தலைமையில் மஃரிப் தொழுதவுடன் திக்ரு மஜ்லிஸ் துவங்கி இஷா வரையில் நடைபெறும்.

இஷா தொழுதவுடன் : கிராஅத் ஹாபிழ் காரீ S.ஜாபிர் அஹ்மது அவர்கள்
கீதம்: M.F.முஹம்மது இக்பால் ஷாதுலி, அவர்கள் (மஸ்ஜிதே அஷ்ரஃப், மண்ணடி, சென்னை-1.)
சிறப்புரை: மௌலானா மௌலவி, அல் ஹாபிழ், அல் ஹாஜ் S.K.M.காஜா முஹ்யித்தீன் காஷிஃபி (கலீபத்துஷ் ஷாதுலி, துணை முதல்வர் அல் மதரஸத்துல் ஃபாஸிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டிணம்)

நன்றியுரை : M.H.சஹாப்தீன் M.Sc.,

முடிவில் ஹாபிழ், காரீகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படும்

பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times