AAF 10ஆம் ஆண்டு நிறைவு விழா – சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டி!!

அமெரிக்க அதிரை மன்றத்தின் (AAF) பத்தாவது ஆண்டு நிறைவு விழா கலிஃபோர்னியா மாகாணம் பெனிசியா நகர் கம்யூனிட்டி பார்க்கில் இம்மாதம் (06/08/2023) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கு பிஸ்கட் கவ்வுதல், சாக்கு ஓட்டம், Lemon Spoon, Music Chair, Frog Run போன்ற விளையாட்டுப் போட்டிகளும், இளைஞர்களுக்கு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் வாலிபால் போட்டிகளும் நடைபெற்றன.

இதுதவிர, குர்ஆன் ஓதுதல், ஓவியம் வரைதல் போட்டிகளும் சிறுவர், சிறுமியர், நடுத்தர வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (இளைஞர் / இளைஞி என) பல பிரிவுகளாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டிருந்தன.

ளுஹர் மற்றும் அஸ்ரு தொழுகைகள் ஜமாஅத்தாகத் தொழ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சுவையான மதிய உணவு, தேநீர், குளிர்பானங்கள் என நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருகை தந்த அமெரிக்க வாழ் அதிரையினர் மற்றும் அனைவருக்கும் (வந்திருந்த அதிரையருக்கு) மனமகிழ்ச்சியுடன் பரிமாறப்பட்டன.

இறுதியாக போட்டியில் வெற்றி பெற்றோருக்கு அமெரிக்க அதிரை மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர் அகமது சலீம், துணைத் தலைவர் பரகத் உதுமான், பொருளாளர் அப்துல் ரவூப், செயலாளர் நஜிமுதீன் மற்றும் இனை செயலாளர் அப்துல் ஜப்பார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மேலும் மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்த சிபுலி உமர், ஜப்ரின் கபீர், அகமது அமீன், தாவூத் மற்றும் இருந்தோருக்கு நன்றி கூறி விழா இனிதே நடந்தேறியது.

தகவல்: அ. அப்துல் ர‌வூப், பொருளாளர், AAF

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times