அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 11-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் 140வது அமர்வு கடந்த (27-02-2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சரபுதீன் தலைமை தாங்கினார். முதலில் கிராத் முஹம்மது ஹசன், அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக Al Abeer Medical Center-ல் பணிபுரியும் Dr.Ali Abdul Jaleel கலந்து கொண்டார். அவருக்கு பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் சரபுதீன் அவர்கள் பொன்னாடை போற்றி கவுரவித்தார்.
சகோதரர் சாதிக் அஹமது வரவேற்புரையை தொடர்ந்து, சிறப்புரையாக ஜக்காத்தின் முக்கியத்துவம் பற்றி அஹமது மசூது அவர்கள் விளக்கினார், அதனை தொடர்ந்து Dr. Ali Abdul Jaleel உடல் நலத்தின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார். பைத்துல்மாலின் சேவைகள் மற்றும் அறிக்கை பற்றி இமாம்கான் வாசித்தார். இறுதியாக நன்றியுரை நெய்னா முகமது வாசித்து இனிதே முடிவடைந்தது










