தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், 26/10/2026 அன்று பணியின்போது தவறி கீழே விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
இத்துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்த தொழிலாளியின் உடலை அவரது சொந்த ஊரான பீகாருக்கு கொண்டு சேர்க்க ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) முன்வந்தது. அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு, ஐமுமுக மொபைல் ஐசியூ (Mobile ICU) ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2,500 கி.மீ. தொலைவுக்கு உடலை எடுத்துச் செல்லும் ஐமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் களப்பணியாளர்களை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.
மொழி, இனம், மாநில எல்லைகளைக் கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதை உணர்த்தும் ஐமுமுக சகோதரர்களின் இந்த துயர் துடைக்கும் சேவை அனைவராலும் மதிக்கத்தக்கது.














Comments (0)
No comments yet.
Write a comment