அதிராம்பட்டினத்தில் உள்ள காரைக்கால் அய்யங்கார் பேக்கரியில் இன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கடையினுள் தீ பிடித்து எரிவதைக் கண்டு, உடனடியாகக் களத்தில் இறங்கி கடையைத் திறந்து தங்களின் தீவிர முயற்சியால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாத காரணத்தால், அருகிலுள்ள ஊரிலிருந்து தீயணைப்பு வாகனம் வந்து சேருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாகவே, பொதுமக்களின் துரித முயற்சியால் தீ முழுமையாக அணைக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு வசதி இல்லாததால் ஒவ்வொரு முறையும் பெரும் பதற்றமும் தாமதமும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற விபத்துகளின் போது ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிராம்பட்டினத்திற்கு எனத் தனியாகத் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இணைப்பு)⬇️


Comments (0)
No comments yet.
Write a comment