அதிராம்பட்டினம் CMP லைன் பகுதியில் கடந்த (15-11-2026) அன்று மாலை தங்க நகை ஒன்று கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நமது இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டு, கண்டெடுத்தவரின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.
நகை கண்டெடுக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியும் இதுவரை உரியவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, கண்டெடுத்தவர் இன்று (28-11-2026) மாலை அந்த நகையை அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார்.
எனவே, நகையைத் தவறவிட்ட உரியவர்கள் சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்திற்கு நேரில் சென்று, நகைக்கான சரியான அடையாளங்களைத் தெரிவித்துப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சங்க அலுவலக நேரம்: வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மாலை 4:00 மணி முதல் மஃரிப் தொழுகை நேரம் வரை.











Comments (0)
No comments yet.
Write a comment