அதிராம்பட்டினம் ரஹ்மானி மஸ்ஜிதில் இயங்கிவரும் ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் & ஹிஃப்ழு மத்ரஸாவில், இளைய தலைமுறையினர் படிக்கும் காலத்திலேயே சிறந்த பண்புகளுடனும் ஒழுக்கத்துடனும் மிளிர வேண்டும் என்ற உயரிய நோக்கில் "முன்மாதிரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி இன்று, (18-10-2026) ஞாயிற்றுக்கிழமை (ஹிஜ்ரி 1448) மஃரிப் தொழுகைக்குப் பிறகு மத்ரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்விற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் & ஹிஃப்ழு மத்ரஸாவின் தலைமை ஆசிரியர் மௌலவி ஷேக் உமர் ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்குகிறார். ஹிஃப்ழு வகுப்பு மாணவரின் கிராஅத்துடன் துவங்கும் இந்நிகழ்ச்சியில், ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் மத்ரஸாவின் ஆசிரியர் மௌலவி நவ்ஃபல் காஷிஃபி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.

தொடர்ந்து சிறப்புரையாக, அதிராம்பட்டினம் அல்-மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா பேராசிரியர் மௌலானா மௌலவி ரஷீது அஹ்மத் காசிமி அவர்கள் “இளைஞனே! உன் நேரம்.. உன் எதிர்காலம்!” என்ற தலைப்பிலும், SRM Institute of Science and Technology நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு முதுநிலை திட்ட இணைப்பாளர் (Senior Project Associate) Dr. A.T. அஹ்மத் முஹைதீன் B.H.M.S., M.D.(Hom) Paediatrics அவர்கள் “இளைஞனே! உன் ஆரோக்கியம்.. உன் எதிர்காலம்!” என்ற தலைப்பிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் உரையாற்ற உள்ளனர்.

மேலும், மத்ரஸா தர்பிய்யத்துல் இஸ்லாமிய்யா ஆசிரியர் நஜ்முத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தொகுப்புரை வழங்க, ஹிதாயத்துல் இஸ்லாம் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் அபூஹுரைரா அவர்கள் நன்றியுரை கூறுகிறார். நிறைவாக மக்தப் மத்ரஸா ஆசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் மழாஹிரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறுகிறது. எதிர்காலத்திற்கு வழிகாட்டும் இந்த பயனுள்ள அமர்வில் மாணவ சமுதாயம் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.