தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கடந்த 08/10/2026 மற்றும் 09/10/2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. இப்போட்டியில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டாம் இடத்தையும், 400 மீட்டர், 600 மீட்டர் மற்றும் 4x100 தொடர் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தையும் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமை சேர்த்ததோடு, அடுத்த கட்டமாக மாநில அளவிலான தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேபோல், தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 12/10/2026 மற்றும் 13/10/2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் மேல் மேலூர் பிரிவில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று, மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகி சாதனை புரிந்த மாணவ கண்மணிகளையும், அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர், பொருளாளர், இயக்குநர், முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.