இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் மொபைல் டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காகப் புதிய பிரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டங்களில் இணைய டேட்டா (Internet Data) எதுவும் கிடைக்காது; அதற்குப் பதிலாக வரம்பற்ற அழைப்புகள் (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) வசதிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. தற்போது ரூ. 185, ரூ. 203 மற்றும் ரூ. 206 ஆகிய மூன்று விலைகளில் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
TRAI-யின் இந்த வழிகாட்டுதலை ஏற்று புதிய திட்டங்களை அமல்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் டேட்டா பயன்படுத்தாத முதியவர்கள், கீபேட் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments (0)
No comments yet.
Write a comment