தஞ்சாவூர் மாவட்டம் சம்பைப்பட்டினத்தில் உள்ள DGL இண்டர்நேஷனல் பள்ளியில் பல்வேறு பள்ளிகளுக்கு இடையேயான மாணவ-மாணவியரின் திறனாய்வுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் அதிராம்பட்டினம் மர்யம் பள்ளித் தெருவைச் சேர்ந்த நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்களின் 5 வயது மகன் முஹம்மத் கலந்துகொண்டு, தான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலுமே பரிசுகளை வென்று அசத்தியுள்ளார்.
மழலையர் பிரிவு (KG) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஃபேன்ஸி டிரஸ் (Fancy Dress), வரைதல் (Sketching) மற்றும் ரைம்ஸ் (Rhymes) ஆகிய மூன்று பிரிவுகளிலும் இவர் பங்கேற்றார்.
காசா குழந்தைகள் குறித்த பேச்சு:
ஃபேன்ஸி டிரஸ் போட்டியில் ராக்கெட் உடையில் மேடையேறிய சிறுவன் முஹம்மத், ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து ஆங்கிலத்தில் பேசினார். உரையின் முதல் பகுதியில் விண்வெளி அறிவியலின் நன்மைகளைப் பேசிய அவர், அடுத்த பாதியில் அதே தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளால் காசாவில் பாதிக்கப்படும் அப்பாவிப் பிஞ்சுகள் குறித்தும் பேசினார்.
குறிப்பாக, “In Gaza, missile attacks have killed and injured many people, including children... Let rockets take us to the stars, not bring war to children” (காசாவில் ஏவுகணைத் தாக்குதல்கள் குழந்தைகள் உட்பட பலரைப் பாதித்துள்ளது... ராக்கெட்டுகள் நம்மை விண்மீன்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, குழந்தைகளுக்குப் போரைக் கொண்டுவரக் கூடாது) என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
போட்டியின் முடிவில், காசா குழந்தைகள் குறித்துப் பேசிய Fancy Dress போட்டியில் முதல் பரிசையும், வரைதல் (Sketching) போட்டியில் முதல் பரிசையும், ரைம்ஸ் போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்றார்.
பரிசுகளை வழங்கிய பள்ளி இயக்குநர், மேடையிலேயே சிறுவனின் பெற்றோரை அழைத்து, “இந்த நிகழ்வின் உண்மையான ஸ்டார் உங்கள் மகன்தான்!” எனப் பாராட்டினார்.
புதிய ஊர், புதிய மனிதர்கள் என போட்டி நிறைந்த சூழலிலும் கலங்காமல் அதிரையின் 5 வயதுச் சிறுவன் வெளிப்படுத்திய இந்தத் திறமை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து, இன்று முஹம்மத் பயிலும் AL பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்திலும் (Prayer) அச்சிறுவன் மேடைக்கு அழைக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்தினரால் பாராட்டப்பட்டார். சிறுவன் முஹம்மதுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



















Comments (0)
No comments yet.
Write a comment