பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், எடிசன் மினி பேருந்து சேவை (EST - Edison Transport) அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவை இன்று (27/10/2026, செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணிக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து முறைப்படி தொடங்கப்பட்டது.
மினி பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை இணைக்கும் இந்த முயற்சி, சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் பெரும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பேருந்து செல்லும் வழித்தடங்கள் & பயன் பெறும் கிராமங்கள்:
எடிசன் மினி பேருந்து கைகாட்டி, பொன்னவராயன்கோட்டை, அணைகாடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், மழவேனிற்காடு மற்றும் இதர கிராமங்கள் வழியாக வண்டிப்பேட்டை, அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் சென்றடைகிறது. (அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்டிற்கு காலை 07:15 மணி, காலை 09:25 மணி மற்றும் மாலை 05:30 மணிக்கு பேருந்து வந்தடையும்).
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து மினி பேருந்து புறப்படும் நேரங்கள்:
- தினசரி காலை நேரத்தில்: காலை 08:02 மணி
- காலை நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை): காலை 10:00 மணி
- மாலை நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை): மாலை 05:50 மணி
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து காலை நேரத்தில் காரைக்குடி மற்றும் மயிலாடுதுறை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் மாலை நேரத்தில் திருவாரூர் வரை இயங்கும் ரயில்களைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இந்த மினி பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் இந்த புதிய மினி பேருந்து சேவையை பயன்படுத்தி பயனடையுமாறு அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.















Comments (0)
No comments yet.
Write a comment