அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊரின் பிரதான சாலைகள் முதல் குடியிருப்புப் பகுதிகள் வரை அனைத்துத் தெருக்களிலும் 5 முதல் 6 நாய்கள் வரை கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, மதரஸாக்களுக்குச் செல்லும் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசல்கள் திறந்திருந்தால், நாய்கள் சாதாரணமாக வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. வீட்டின் படிக்கட்டுகள் மீது ஏறிச் செல்வது, கார் மற்றும் பைக் பார்க்கிங் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்வது போன்றவை வாடிக்கையாகிவிட்டன. மேலும், அரசு மருத்துவமனை சாலை, குடியிருப்புத் தெருக்களில் நாய்க்குட்டிகளும் அதிகளவில் நடமாடுவதால், தாய் நாய்கள் அவ்வழியே செல்வோர் மீது பாயும் ஆபத்தும் நிலவுகிறது.
தெருக்களில் வாகனங்களில் செல்வோர் மீது திடீரென நாய்கள் பாய்வதால் பல இடங்களில் இருசக்கர வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தெருநாய்களைக் கட்டுப்படுத்த முறையான கருத்தடை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


























Comments (0)
No comments yet.
Write a comment