ஹோட்டல் உரிமையாளர் சோறு பரிமாறுவதற்காக குனிந்த போது அந்தப் பெரியவர் கேட்டார், மதிய உணவுக்கு எவ்வளவு?
உரிமையாளர் சொன்னார், மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்….
கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினார்….
இதுவே என் கையில் உள்ளது… இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க…. வெறும் சோறு என்றாலும் பரவாயில்லை…
மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள். தொண்டையோ நடுங்குகிறது….
ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு… அனைத்தையும் அவருக்கு வழங்கினார்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்….
அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன…
ஏன் அழுகிறீர்கள்…?
அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்…
எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்….
எனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்…..
மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்….
நான் சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன். அதற்காக என் இளமையையும் 28 ஆண்டுகால வாழ்க்கையையும் இழந்து புலம்பெயர்ந்தேன்…
எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள்….
சொத்துப் பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள், மகள்கள் என்னைத் தள்ளி ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.
நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்….
எனக்கு வயதாகிவிட்டதா….?
குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது மதிக்க கூடாதா ?
அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் இரவு உணவிற்கு செல்வேன், அப்படியும், அப்போதும் திட்டுவதும், கூச்சலிடுவதும் தவற வில்லை, சாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது.
பேரக்குழந்தைகள் என்னிடம் பேசுவதே இல்லை. பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில்…
இரவும் பகலும் வியர்வை சிந்தி தொடர்ந்து தூங்காமல் உழைத்து, வயிற்றுக்கு சாப்பிடாமல், அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய செங்கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு….
ஆனால் நான் என்ன செய்வது? மருமகளின் தங்கத்தை திருடிவிட்ட தாக – சாக்குப்போக்கில்- திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்…
மகன் கோபமடைந்தான், நல்லவேலை கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் ய்செய்யவில்லை. அது என் அதிர்ஷ்டம்.
அங்கேயே நான் இருந்து இருந்தால் நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்.
சாப்பாட்டின் நடுவில் எழுந்தார்.
உரிமையாளர் முன் 10 ரூபாயை நீட்டினார்..
வேண்டாம், பையில் வையுங்கள், இருக்கட்டும்…. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்… நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்..
அப்படியே அந்த மனிதர் 10 ரூபாயை அங்கேயே வைத்துவிட்டு…. உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி….
சுயமரியாதை என்னை விட்டு விலகாதே.
வருகிறேன் என்று சொன்னதும் ஒரு சிறு மூட்டையை எடுத்துக்கொண்டு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர்…
அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய காயம் இன்று வரை ஆறவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும் என்று கூறப்படுகிறது.
பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை பூவில் வைத்து கண் போல் காக்க வேண்டும்.
நமக்கு இப்படி ஒரு நாள்..???
Insightful read! Your analysis is spot-on. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!
This was a fascinating read! The author did a fantastic job. I’d love to discuss this topic further. Click on my nickname for more engaging content!