அதிரை மண்ணிற்குப் பெருமை: சவூதி தாயிஃப் நகரில் இமாமத் செய்யும் அதிரை காரி!

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த காரி ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள், இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் முழுவதும் சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள ‘ஸாத் பின் வாயில்’ (Saad Bin Wael) மஸ்ஜித்தில், இஷா, தராவீஹ் மற்றும் வித்ரு தொழுகைகளைத் தலைமையேற்று நடத்தும் உயரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். தனது இனிமையான குரலால் குர்ஆன் வசனங்களை ஓதி இமாமத் செய்து வரும் இவர் அதிரை மண்ணிற்க்கு பெரும் பெருமை சேர்த்துள்ளார்.”

சவூதி அரேபியா போன்ற புனித நாடுகளில், குறிப்பாக ரமலான் காலங்களில் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதி பெற்று ஒரு வெளிநாட்டவர் இமாமத் செய்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. இதற்காகப் பலகட்ட குரல் தேர்வுகள் (Voice Tests), தஜ்வீத் (குர்ஆன் ஓதும் முறை) விதிகள் மற்றும் நேர்காணல்களைக் கடக்க வேண்டும். அதில் காரி ஜாபிர் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார், அதனைத் தொடர்ந்து தாயிஃப் நகரில் அமைந்துள்ள ஸாத் பின் வாயில் மஸ்ஜித் நிர்வாகிகள் அவருக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச அளவில், சவூதி தாயிஃப் நகரில் இமாமத் செய்வது ஊர் மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அதிரை உறவுகளுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

“இறைவனின் அருளால் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, விடாமுயற்சிக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். அதிரையர்களின் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் காரி ஜாபிர் அவர்களுக்குத் தொடர்கின்றன.”

தொழுகை நடத்திய அந்த காணொளியைக் காண, கீழே உள்ள யூடியூப் (YouTube) லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

Prayer Times

Advertisement