அதிரையில் கோலாகலமாக துவங்கிய SSMG கால்பந்து தொடர்!! முதல் நாள் போட்டி முடிவுகள்!!

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி 12/06/2023 இன்று மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது, முதல் நாள் ஆட்டத்தினை துவக்கி வைக்க அதிரை நகர்மன்ற தலைவர் திருமதி தாஹீரா அம்மாள் அப்துல் கறீம் அவர்கள், துணைத்தலைவர் திரு.இராம குணசேகரன், கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் ஜனாப்.வீஎம்ஏ.அஹமது ஹாஜா, பீஜிடி முஹம்மது இஸ்மாயில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர், அனைத்து முஹல்லா தலைவர் ஜனாப்.தாஜூதீன் மற்றும் கீழத்தெரு தலைவர் ஜனாப்.ஜியாவூதீன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.

நாளையதினம் ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times