தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்வு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நகர தலைவராக வழக்கறிஞர் முனாஃப் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளராக வழக்கறிஞர் Z முகம்மது தம்பி அவர்களும் பொருளாளராக ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஷேக்தாவூத் மிஸ்பாகி அவர்கள். இறைமறை வசனங்களுடன் நிரவாக தேர்வு துவங்கியது.
முன்னதாக வரவேற்பு உரையை மாவட்ட பிரதிநிதி ஜமால் நிகழ்த்தினார்.நன்றியுரை நகர செயலாளர் z .முகம்மது தம்பி நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் அதிவேக ரயில் நின்று செல்ல வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சிக்காக உழைத்து மறைந்த KSA அப்துல் ரஹ்மான் மற்றும் நகர தலைவர் KK ஹாஜா அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நகர நிர்வாக கூட்டத்தில் ஏராளமான முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Wonderful perspective! The points you made are very enlightening. For further information, visit: DISCOVER MORE. Excited to hear your views!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.