இமாம் ஷாஃபி பள்ளியில் குறுங்காடுகள் வளர்ப்பு, சொட்டு நீர்ப் பாசனம் குறித்த விழிப்புணர்வு!!

அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் 29/05/2023 அன்று Farm House Campus-ல் சமூக குறுங்காடுகள் வளர்ப்பு, சொட்டு நீர்ப் பாசனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தாளாளர் அவர்கள் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பட்டுக்கோட்டை வேளாண்மை மைய நிபுணர் திருமதி. பிருந்தா அவர்களும், துணை நிபுணர் திரு. கார்த்திக் அவர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களைப் பேராசிரியர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். வேளாண்மை மைய நிபுணர் திருமதி. பிருந்தா அவர்கள் வேளாண்மைத்துறைக் கல்வி, சிறப்புகள, பிரிவுகள் பற்றியும், குறுங்காடுகள் வளர்ப்பு, பயன்பாடுகள் பற்றியும், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை , பயன்பாடுகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். வேளாண்மை மைய துணை நிபுணர் திரு.கார்த்திக் அவர்கள் சொட்டுநீர்ப் பாசனம் பற்றிய செயல்முறை விளக்கத்தை அளித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்வில் பள்ளியின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times