AAF உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய சமயநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் ஃப்ரீமோண்ட் நகரிலுள்ள ஜகரிய்யா பள்ளியில் அமெரிக்க அதிரையர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (15-04-2023) அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவுக்கான இந்தியாவின் துணைத் தூதுவர் ராகேஷ் அட்லாகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி சமயநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலிஃபோர்னியா மாகாண சபை உறுப்பினர்கள், இந்து மற்றும் கிறித்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிரையர் மன்றத்தின் தலைவர் சகோ.அகமது சலீம் தலைமையில் இந்தப் பகுதியில் வசிக்கும் அதிரையர் பெரும்பாலோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

சகோ. ஜாபிர் (S/o. அகமது சலீம்) அமெரிக்க அதிரையர் மன்றத்தின் இதுவரையிலான செயல்பாடுகளை விளக்கினார். முன்னாள் தலைவர் சகோ. அப்துல் ஹக்கீம் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியை அமெரிக்க அதிரையர் மன்றத்துடன் இணைந்து

1) UNITED TAMIL MUSLIM ASSOCIATION OF AMERICA (UTMA)

2) AMANA GLOBAL FOUNDATION

3) KERALA MUSLIM ASSOCIATION

4) AMERICAN ADIRAI FORUM

ஆகிய அமைப்பினர் நடத்தினர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Janet
Janet
5 months ago

Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x