அல்லாஹ்வின் உதவியால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி-பதில் போட்டி கடந்த 13/01/2023 முதல் நடத்தப்பட்டு தொடர்ந்து ஏழு (வெள்ளிக்கிழமை) வாரங்கள் வாரம் 10 கேள்விகள் கேற்கப்பட்டு 24/02/2023 அன்றுடன் போட்டி நிறைவு பெற்றது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் 03/03/2023 (வெள்ளிகிழமை) அன்று போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
ஏழு வாரங்களாக கேற்கப்பட்ட 70 கேள்விக்குண்டான பதில்கள் பின்வருமாறு!!
முதல் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது?
ரமளான்
2) சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
அலீ (ரலி)
3) மலம் ஜலம் கழிப்பதால் உளூ முறியுமா?
ஆம்
4) நபி (ஸல்) பிறந்த ஆண்டு எது?
யானை ஆண்டு
5) அல்லாஹ் எங்கு இருக்கிறான்? (பார்க்க சூரா தாஹா)
அர்ஷில் இருக்கிறான்
6) குர்ஆனில் பெரிய சூரா எது?
சூரா பகரா
7) நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் நபிப் பட்டம் வழங்கப்பட்டது?
40
8) எந்த நபி மஸீஹ் என்று அழைக்கப்பட்டார்கள்?
ஈஸா (அலை)
9) நபியவர்களின் முதல் மனைவி யார்?
கதீஜா (ரலி)
10) ஈமானின் கடமைகள் எத்தனை?
6
இரண்டாம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) இரண்டாவதாக இஸ்லாமில் இணைந்தவர் யார்?
அலீ (ரலி)
2) இரண்டாவது நபி யார்?
இத்ரீஸ் (அலை)
3) இஸ்லாமில் இரண்டாவது கடமை எது?
தொழுகை
4) ஹன்தக் போரின்போது அகழ் வெட்ட ஆலோசனை வழங்கிய ஸஹாபி யார்?
ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி)
5) தவாஃப் என்றால் என்ன?
கஃபாவை வலம் வருதல்
6) நபி (ஸல்) இரண்டாவதாக மணமுடித்தவர் யார்?
ஸவ்தா (ரலி)
7) எந்த இரண்டு அருட்கொடைகளில் மக்கள் பொடுபோக்காக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஆரோக்கியம் & ஓய்வு
8) எந்த நபியின் பொறுமையை அழகிய பொறுமை என்று குர்ஆன் வர்ணனை செய்கின்றது?
யஃகூப் (அலை)
9) குர்ஆனின் பெரிய வசனம் எந்த சட்டத்தை பற்றி குறிப்பிடுகிறது?
கடன்
10)அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் எதிலிருந்து படைத்தான்?
நீர்
மூன்றாம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) மலம், ஜலம் கழிக்கும் சமயம் எதை முன்னோக்க (ம) பின்னோக்க கூடாது?
கஃபா திசை
2) எந்த நபியின் கூட்டத்தினர் முழுவதும் இஸ்லாமை ஏற்றனர்?
யூனுஸ் (அலை)
3) குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பு என்ற குழப்பத்தின்போது அதை எதிர்த்து நின்ற இமாம் யார்?
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்)
4) எந்த மன்னர் மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்?
முகவ்கிஸ்
5) ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன் இறந்து விட்டால் அப்பெண் எத்தனை நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது?
குழந்தை பெற்று எடுக்கும் வரை.
6) அல்லாஹ் மனிதர்களை எத்ற்கு படைத்தான்?
அவனை வணங்குவதற்கு படைத்தான்
7) வாழ்நாளில் ஒரு சுஜூத் கூட செய்யாமல் ஷஹீதான ஸஹாபி யார்?
அம்ர் பின் ஸாபித் (ரலி)
8) முஅவ்விததைன் என்று எந்த சூராக்களுக்கு சொல்லப்படும்?
சூரா அல் ஃலக், அந்நாஸ்
9) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது குறைஷிகளின் குதிரைப் படைக்குத் தலைமை வகித்தவர் யார்?
காலித் பின் வலீத்(ரலி)
10) இப்ராஹீம் நபியின் மனைவி சாரா அம்மையாரின் அடிமைப்பெண் யார்?
ஹாஜர் (அலை)
நான்காம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) முஸ்லிம்களால் முதலில் கொல்லப்பட்ட காஃபிர் யார்?
அம்ர் பின் ஹள்ரமீ
2) அல்லாஹ்வின் தன்மைகளை படைப்பினங்களின் தன்மைகளோடு ஒப்பிடும் வழிகெட்ட கூட்டம் யார்?
முஷப்பிஹா
3) முதல் ஹதீஸ் கிரந்தத்தை தொகுத்தவர் யார்?
மாலிகீ மத்ஹபுடைய இமாம், மாலிக் (ரஹ்)
4) பேன் மூலம் வேதனை கொடுக்கப்பட்ட கூட்டம் எது?
ஃபிர்அவ்னின் சமுதாயம்
5) மக்காவில் முதன் முதலாக குர்ஆனை பகிரங்கமாக ஓதிய ஸஹாபி யார்?
அப்துல்லஹ் பின் மஸ்ஊத் (ரலி)
6) நபிமார்களின் தந்தை என்று அழைக்கப்படும் நபி யார்?
இப்ராஹீம் (அலை)
7) எந்த இரு விஷயங்கள் கொண்டு உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
பொறுமை & தொழுகை
8) ரமழான் எந்த ஆண்டு கடமையாக்கப்பட்டது?
ஹிஜ்ரி 2
9) எல்லா வசனமும் “ரா(ر)” என்ற எழுத்தில் முடியும் சூரா எத்துனை? அவை யாவை?
சுரா கவ்ஸர்
சுரா அசர்
சுரா கதர்
சுரா கமர்
10) ருகூஉ மற்றும் சுஜூத் இல்லாத தொழுகை எது?
ஜனாஸா தொழுகை
ஐந்தாம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) முதன்முதலாக நோன்பு நோற்ற நபி யார்?
ஆதம் (அலை)
2) தன் சுய அறிவிற்கு முரண்படுகிறது என்பதால் மட்டும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கும் வழிகெட்ட கூட்டம் யார்?
முஃதஸிலா
3) நபி (ஸல்) அவர்கள் கடைசியாக செய்த அமல் என்ன?
மிஸ்வாக் செய்தல்
4) அபுல் மஸாகீன் என்று அழைக்கப்பட்ட ஸஹாபி யார்?
ஜஃபர் பின் அபீ தாலிப் (ரலி)
5) ஷாஃபியீ மத்ஹபின்படி மஸாஃபத்துல் கஸ்ர் & ஜம்உ (பயணத் தொழுகைக்கான தூரம்) எவ்வளவு?
சுமார் 81 கிமீ
6) எந்த தொழுகையில் இரண்டு ருகூஉகள் செய்யப்படும்?
சூரிய, சந்திர கிரகண தொழுகைகள் / கிரகண தொழுகை
7) நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களை எத்தனை முறை அவர்களின் அசல் தோற்றத்தில் கண்டார்கள்?
இரண்டு முறை
8) நபி (ஸல்) அவர்கள் பத்துஆ செய்ததின் (சபித்ததின்) காரணமாக எவரை சிங்கம் சாப்பிட்டது?
உதைபா பின் அபூ லஹப்
9) இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் தொகுத்த பிரபல்யமான ஃபிக்ஹ் கிதாபின் பெயர் என்ன?
அல் உம்மு
10) நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரமழான்கள் நோன்பு நோற்றார்கள்?
9 ரமழான்கள்
ஆறாம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) செய்யாத ஒன்றுக்கு பழி சுமத்தப்பட்டதாக குர்ஆனில் குறிப்பிடப்படும் உயிரினம் எது?
ஓநாய்
2) பத்ருப் போரில் ஷஹீதாக்கப்பட்ட முதல் அன்ஸாரி ஸாஹாபி யார்?
ஹாரிஸா பின் சுராக்கா (ரலி) (அல்லது) உமைர் இப்னு அல்ஹுமாம் (ரலி)
3) ஷவ்வால் பிறை பார்த்த பின் நோன்பு பெருநாள் தொழுகைக்குமுன் கொடுக்கப்படும் தர்மத்திற்கு என்ன சொல்லப்படும்?
ஸதக்கத்துல் ஃபித்ர்
4) நபி (ஸல்) அவர்களால் ஒரு தலாக் கூறப்பட்டு மீண்டும் மீட்டுக் கொண்ட நபியின் மனைவி யார்?
ஹஃப்ஸா (ரலி)
5) எந்த சூராவின் ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது?
சூரா முஜாதலா
6) எந்த ஸஹாபியை அரேபியாவின் கிஸ்ரா என்று அழைக்கப்பட்டது?
முஆவியா (ரலி)
7) குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் தன்மைகளை மறுத்து மாற்றுப் பொருள்களைக் கூறும் வழிகெட்ட கூட்டம் யார்?
ஜஹ்மிய்யா
8) நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு மதீனாவிலிருந்து முஸ்லிம்கள் அணிவகுத்த முதல் படை எது?
ஸலமதுப்னு ஜுபைர் அவர்களின் படை
9) மூஸா (அலை) அவர்களுடன் கிள்ர் (அலை) அவர்களை சந்திக்க சென்றவர் யார்?
யூஷஉ பின் நூன் (அலை)
10) முதன் முதலில் மார்க்க சட்டத்தின் அடிப்படைகள் (உசூலுல் ஃபிக்ஹ்) சம்பந்தமான கிதாப் யாரால் தொகுக்கப்பட்டது?
இமாம் ஷாஃபியீ (ரஹ்)
ஏழாம் வார கேள்விக்குண்டான பதில்கள்!
1) ஹதீஸ்களை சேகரிப்பதற்கு முதன் முதலில் கட்டளையிட்ட கலீஃபா யார்?
உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
2) ஹைர்தூஸ் என்ற மன்னனால் கொல்லப்பட்டதாக கூறப்படும் நபி யார்?
யஹ்யா (அலை)
3) எந்த ஏழு விஷயங்கள் வருவதற்கு முன் அமல்களில் முந்திக்கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்?
மறக்கடிக்க கூடிய வறுமை; செல்வநிலை; செயலிழக்கச் செய்யும் நோய்; மனநலம் குன்றியதாக மாற்றும் முதுமை; திடீர் மரணம்;தஜ்ஜால்; மறுமை நாள்
4) நபியவர்களுக்கு மிகவும் பிரியமான மூன்று நபித்தோழர்கள் யார்?
அபூபக்கர், உமர், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்
5) குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பு என்ற குழப்பத்தின்போது அதை எதிர்த்து மரணித்தவர் யார்?
முஹம்மத் பின் நூஹ் (ரஹ்)
6) அலி (ரலி) அவர்களுடைய வம்சத்தில் உமர் (ரலி) அவர்களின் பெயர் வைக்கப்பட்ட மூன்று பேர் யார்?
அலீ (ரலி) அவர்களுடைய பேரன்
ஹசன் (ரலி) அவர்களுடைய மகன்
ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மகன்
7) தாகூத் என்றால் என்ன?
தாகூத் என்பது கட்டுப்படுவதிலும், பின்பற்றுவதிலும், வழிபடுவதிலும், அடியார்கள் வரம்பு மீறும் அனைத்தும் தாகூத் ஆகும்.
8) ஷாஃபியீ மத்ஹபின்படி தங்கத்தின் மீதான ஜகாத்தின் நிசாபின் அளவு என்ன? மேலும் பெண்கள் எந்த தங்கத்திற்கு ஜகாத் வழங்க அவசியமில்லை?
85 கிராம்; அணியும் நகைகளுக்கு பெண்கள் ஜகாத் வழங்க அவசியமில்லை
9) சூரா சஜ்தாவில் வழிகாட்டியாக (இமாமாக) ஆவதற்கு தேவையான இரண்டு குணங்கள் என்று அல்லாஹ் எவற்றை குறிப்பிடுகிறான்?
பொறுமை, நம்பிக்கை
10) ஹுதைபிய்யா உடன்படிக்கை முடிந்த நேரத்தில் இஸ்லாமை ஏற்க வந்து குரைஷிகளிடம் நூறு ஒட்டகங்கள் பெற்றுக் கொண்டு இஸ்லாமை ஏற்காமல் திரும்பிய அரபுக் கவிஞர் யார்?
அல் அஃஷா என்னும் மைமுன்
Fantastic perspective! The points you made are thought-provoking. For more information, I found this resource useful: FIND OUT MORE. What do others think about this?