அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது இர்ஷாத் அவர்கள் CM செல்லிற்கு பொது நலன் கருதி அனுப்பிய கடிதம் பின்வருமாறு…
சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) வரையிலான வந்து செல்லும் அரசு விரைவு பேருந்து (தடம் எண் 333) என்ன காரணத்திலோ தெரியவில்லை, கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் அதில் பயணித்து போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டி தந்தார்கள்.
தயவுகூர்ந்து அந்த வழித்தடத்தில் மீண்டும் அதே வகையிலான புதிய வெள்ளை நிற பேருந்தை (SETC) இயக்க உத்தரவிடுங்கள். எங்கள் மக்கள் சார்பாக பல ஆண்டுகளாக கோரிக்கையை ஒற்றை ஆளாய் நான் இங்கு வைக்கிறேன். நல்ல வருவாய் ஈட்டக்கூடிய வழித்தடம் ஐயா இது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே. எங்கள் ஊர் மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்யுங்கள். நன்றி!
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) மக்கள் சார்பாக இக்கோரிக்கை நிறைவேறும் என நம்புகிற சாமானியன்.
நான்.
அஹமது இர்ஷாத்
அதிராம்பட்டினம்
இதனை பார்வையிட்ட அதிகாரிகள், உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் அரசு விரைவு பேருந்து இயக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்… இந்த முயற்சியை செய்த சமூக ஆர்வலர் அஹமது இர்ஷாத் அவர்களுக்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்…
ஊருக்கு உருப்படியான வேலை செய்தவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?