WhatsApp செயலியானது அனைத்து பயனர்களின் பிரச்சனைகள், பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில், WhatsApp இப்போது “delete for everyone” என்ற ஆப்ஷனுக்குப் பதிலாக “delete for me” என்பதை தேர்ந்தெடுத்தால், அதை சரிசெய்யும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, delete for me என்பதை கிளிக் செய்துவிட்டால், உடனே அதன் அருகில் Undo என்று திரையில் தோன்றும். இதன் மூலம் மீண்டும் நீங்கள் டெலிட் செய்த மெசேஜ் திரையில் கொண்டு வரலாம், அதை மறுபடியும் கவனமாக delete for everyone என்று கிளிக் செய்து டெலிட் செய்யலாம்
“UNDO” என்ற அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்த அம்சத்தை உங்களால் பயன்படுத்த முடியாவிட்டால், உங்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யவும்