கல்வி சுற்றுலா பயணம்! மாணவர்களை திருச்சி NIT பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்ற இமாம் ஷாஃபி பள்ளி!

கல்வி சுற்றுலா ஆசிரியர் குழுமம் :- 12/12/2022 அன்று காலை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து எட்டு மணிக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்குச் சென்றோம். NITஎங்களை அன்புடன் வரவேற்றது. அங்கே முதலில் பெரிய அரங்கத்தின் உள்ளே சென்றோம். மாணவர்கள் முன்னிலையில் நிறுவனர், பேராசிரியர் முதலியோர் உரையாற்றினார்கள்.அவர்கள் உரையைக் கேட்ட பிறகு, நாங்கள் புதிய பல செய்திகளை தெரிந்து கொண்டோம். அதில் முக்கியமானது, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிற்கு 50% சீட்டுகள் வழங்கப்படுகின்றன. 

NIT பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாததால்தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் யாரும் சேர்வதில்லை. பிற மாநிலங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வருகை புரிந்து, தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட 50%சீட்டுகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இனி வரும் காலங்களில் இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் JEE என்ற நுழைவு தேர்வை எழுதி இந்திய அளவிலே, முதல் 50இடங்களை பிடித்து NIT,IIT முதலிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்து பயன்பெற வேண்டும். NIT கழகமானது சுமார் 900 ஏக்கர் பரப்பளவை கொண்டது.

அதில் பயிலும் மாணவர்கள் பல மாநிலங்களில் இருந்தும் வருவதால், அந்த இடம் மொழிகளின் காட்சி சாலையாகவும் சிறிய இந்தியாவாகவும் காட்சியளிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக கவனித்து வந்தோம். அடுத்ததாக ஒரு அறைக்குள் சென்றோம். அங்கே ஒரு பேராசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தார். மாணவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை நீக்கிய பிறகு, அங்கே வழங்கக்கூடிய பாடப்பிரிவுகளையும் தெளிவாக விளக்கினார். அது மட்டுமன்றி JEE நுழைவு தேர்வு பற்றியும், அதில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். அங்கு படித்தவர்கள் எல்லாம் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்கள் ஆகவும் தொழில் முனைவோராகவும் இருப்பதை சுட்டிக் காட்டினார். 

அதன் பிறகு, Robotic ஆய்வகத்திற்கு  அழைத்துச் சென்றனர். அங்கே பயிலும் மாணவர்,  பெரிய தொழிற்சாலைகளில் இரும்பு கம்பிகளில் துளையிடும் ரோபோ வகைகளைப் பற்றி தெளிவாக விளக்கினார். அதன் பிறகு, பெரிய நூலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அது நான்கு மாடி  அடுக்குகளைக் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு அடுக்குகளிலும், ஒவ்வொரு துறைக்கும் தேவையான எண்ணற்றபுத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததன. அது பார்ப்பதற்கு கண்ணுக்கும் மனதுக்கும் இனிய விருந்தளிப்பது போல காட்சி அளித்தது. 

​அடுத்ததாக உணவு இடைவேளை முடிந்து, அங்குள்ள பெரிய அரங்கத்தில் மாணவர்கள் தொழுகையை மேற்கொண்டனர். அதன் பிறகு இயற்பியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பள்ளி மாணவர்களுக்குச் சில பரிசோதனைகளை செய்து காட்டி, சில விதிகளையும் கூறிவிளக்கம் அளித்தனர். அதன் பிறகு, ORIEN MIYAWAKIFOREST-க்கு அழைத்துச் சென்றனர். அது மாணவர்களே உருவாக்கிய ஒரு சிறிய காடாகும். அதில் சிறிய குளம், அந்தக்குளத்தில் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கின. நான்கு சதுர பகுதிகளாக வடிவமைத்த சிறிய காடுகளின் நடுவே மண்ணால் ஆகிய அடுக்குகளில் அமரும் மேடைகளை, அங்கு பயிலும் மாணவர்கள் வடிவமைத்து கொண்டிருந்தனர்.இவற்றையெல்லாம் மாணவர்கள் உற்சாகத்துடனும், மனதில் மகிழ்ச்சியுடனும் பயனுள்ள வகையில் கல்வி சுற்றுலாவைக் கண்டு களித்தனர்.

இப்படிக்கு,

கல்வி சுற்றுலா ஆசிரியர் குழுமம்,

இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

அதிராம்பட்டினம்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times