அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவு ஆற்றிய ஃபாத்திமா சபரிமாலா!

​அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 20/11/2022 அன்று மதியம் 3.00 மணி அளவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திருமதி ஃபாத்திமா சபரிமாலா வருகை புரிந்துள்ளார்.

​மாணவிகளுக்கு ஒரு அருமையான சொற்பொழிவு ஆற்றினார். மாணவிகள் எவ்வாறு பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் நடந்து கொள்ளவேண்டும் என்பதனை தெளிவாகவும், மாணவிகள் விரும்பும் வண்ணமும் அழகாக எடுத்துரைத்தார். ​இந்நிகழ்ச்சியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​பள்ளி மற்றும் பள்ளி வளாகம் மிகவும் அருமையாக இருந்ததாகவும், பள்ளி மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை தன்னை மிகவும் ஈர்த்ததாகவும் எத்தனையோ பள்ளிகளையும், கல்லூரிகளையும் நான் கடந்து வந்துள்ளேன் ஆனால் இந்த இமாம் ஷாஃபி பள்ளி மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் நல்ல சூழ்நிலை சிறப்பு வாய்ந்ததாகவும், இதனை மற்ற அரங்கங்களிலும் எடுத்து கூறுவேன் என்றும் மீண்டும் ஒருமுறை இப்பள்ளிக்கு வருகை தர தனது உள்ளம் நாடுவதாகவும் ஃபாத்திமா சபரிமாலா அவர்கள் கூறியது மிகவும் பெருமையாக இருந்ததது என பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஃபாத்திமா சபரிமாலா அவர்கள் ஆற்றிய உரை விரைவில் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் வெளியிடப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Evelynt
5 months ago

What a well-written and thought-provoking article! It offered new perspectives and was very engaging. Im curious to hear other opinions. Feel free to visit my profile for more related content.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x