அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் நேற்று இரவு 7:00 மணி அளவில் வானத்தில் பறக்கும் ரயில் போன்று வித்தியாசமான முறையில் காட்சி அளித்ததாக அதிரை கடலோர பகுதி மக்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்திற்கு தெரியப்படுத்தினர்.
மேலும் அதனை பார்ப்பதற்கு பறக்கும் ரயில் போன்று காட்சி அளித்ததாக கூறப்படுகிறது மேலும் உடனடியாக அந்த காட்சி மறைந்து விட்டதால் புகைப்படமும் எடுக்கமுடியவில்லை என தகவல் அளித்தனர், அதனையடுத்து அது என்ன காட்சி என இது குறித்து விசாரித்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை பிரபல தொலைக்காட்சி செய்தில் இதே போல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் நேற்றிரவு சுமார் எட்டு மணி அளவில் வானத்தில் பறக்கும் ரயில் போன்ற வித்தியாசமான உருவத்தை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதை உடனே தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட்டது என கூறப்படுகிறது. அதை பற்றி விசாரித்த போது ட்விட்டரை வாங்கிய எலன் மாஸ்க்கின் சாட்டிலைட் தொகுப்பாக இருக்கும் எனவும், இது இரண்டு மாதத்திற்கு முன்பு வட இந்தியாவில் தெரிந்ததாகவும் தற்போது உசிலம்பட்டி பகுதியில் தெரிந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மிகவும் ஆச்சரியமாக பறக்கும் ரயில் போல் காட்சி அளித்துள்ளது.