அதிரை வரலாற்றில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்த மர்ஹும் MS. தாஜுதீன் ஹாஜியார் அவர்கள்!

மர்ஹும் M.M.சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாக 16.06.1946 ஆம் ஆண்டு பிறந்தார்கள் MS.தாஜுதீன் ஹாஜியார் அவர்கள் சிறு வயது முதல் கல்வி கற்பதிலும் உடல் ஆரோக்கியம் பெரும் விளையாட்டுக்களின் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார்கள், தனது படிப்பைத் தொடர்ந்து, சென்னை புதுக் கல்லூரியில் B.A படித்துவிட்டு அதன் பிறகு, தூத்துக்குடியில் இருக்கும் அஹமது கம்பெனியில் அவர்கள் தந்தையருக்கு உதவியாக அங்கு இருந்து உள்ளார்கள். உலகக் கல்வியோடு மார்க்க கல்வியிலும் சிறந்து விளங்கி உள்ளார்கள்.

தனது 26ஆம் வயதில் இருந்தே சிறந்த சமூக சேவகராகவும் (சோசியல் ஒர்க்கர்) பயணித்து, அதிரை சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வழிகாட்டும் ஒளியாக அவர்களின் உயரிய பண்பாடுகள், நேர்மை, உழைப்பு, பொறுமை, பிறருக்கு உதவும் மனப்பாங்கு அவர்களின் அறிந்தவர்கள் மனங்களில் ஆழமாக பதிந்தவை. அனைவருக்கும் சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும், அனைவரும் பயன் பெரும் வகையில் 1973 ஆம் ஆண்டு இமாம் ஷாஃபி ஸ்கூல் ஆரம்பித்து தற்போது பொன் விழா ஆண்டையும் கடந்து மிக சிறப்பான முறையில் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறது.

மேலும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சிறந்த பட்டதாரிகளாக பணி செய்து வருகிறார்கள், மேலும் பட்டதாரிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல்,
மார்க்க கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக
பல்வேறு மதர்ஸாக்களை உருவாக்கியும் அதிகமான இறை இல்லங்களை துவக்கியும் உள்ளார்கள் என்பது மிக சிறப்பு.

இறை இல்லங்கள் அதிகமாக வருவதற்கு இவர்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்கள் என்பதும், 1973 ஆம் ஆண்டு அவர்களின் அப்பா ஹனீப் ஹாஜியார் நினைவாக ஹனீப்பள்ளி வாசல் பொன் விழா ஆண்டையும் கடந்து அதிரையின் முக்கிய பள்ளியாக திகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நல் உள்ளத்தின் உருவாகிய, செக்கடி நடைமேடை 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பெண்களும்/ஆண்களும் பயன் பெரும் வகையில் தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதிரை FM பண்பலை 2016 ஆம் ஆண்டு துவக்கம் கண்டது இதன் மூலம் பொது மக்கள் பயன் பெரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது குறிப்பிடதக்கது!

மேலும்,

President, MKN TRUST – Kadir Mohideen College,

TRUSTEE – CHENNAI PORT TRUST,

TRUSTEE – TUTICORIN PORT TRUST,

Secretary – Measi ஸ்கூல்,

EXECUTIVE COMMITTEE MEMBER – NEW COLLEGE,

CHAIRMAN – UEF CHARITABLE TRUST,

Founder & Secretary – இமாம் ஷாபி ஸ்கூல்

Secretary – ARDA,

CHAIRMAN – TUTICORIN STEDORING ASSOCIATION

பல்வேறு துறைகளிலும் முக்கிய பொறுப்புகள் என
இன்னும் எண்ணற்றவைகளில் இருந்துள்ளார்கள்!

35 வருடங்களுக்கு முன்னால் கடலில் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீர் காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து அவர்களுக்கு நீச்சல் தெரியாத அந்த தருணத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் உதவியால் அவர்களின் மறு பிறவியாக கரை வந்து சேர்ந்தது என பல நிகழ்வுகளில் இருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்து அதனை எவ்வாறு முன்னேற்றம் அடைந்து இதில் சாதித்து காட்ட வேண்டும் என்ற அவர்கள் முனைப்போடும் செயல்பட்டது வியக்கத்தக்கது!

அதிராம்பட்டினத்தில் இரண்டு முறை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தி அதிராம்பட்டினத்தில் 100% கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை செக்கடி மேட்டில் தஞ்சை மாவட்ட கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தி பணியாற்றியுள்ளார்கள், இந்த கல்வி மாநாட்டின் நோக்கமே அதிராம்பட்டினத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும், அதன் காரணமாகவே பெரிய பெரிய கல்வியாளர்கள் எல்லாம் அழைத்து மாநாட்டில் பேச வைத்ததன் விளைவுவாக நல்லதொரு மாற்றம் கண்டுள்ளது. மாஷா அல்லாஹ் 100% கல்வி கற்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது மிக சிறப்பு.

தனது உடல்நிலையை பொருட்படுத்தாது, பள்ளி ஆண்டு விழா நிகழ்வுகளில் முதன்மையாக கலந்து கொண்டு அதில் சிறப்புரை ஆற்றுவதும் அவர்களின் தனிச் சிறப்பு. மேலும் தொழுகை நேரங்களில் முதல் வரிசையில் நாற்காலியில் தொழாமல் நின்று கொண்டு தொழுவார்கள் என்பதையும், மார்க்கம் சம்பந்தமான நிகழ்வுகளில் அவர்கள் முன்னிலைப்படுத்தி அவர்கள் முதன்மையாக அமர்வார்கள் என, சென்ற வார ஜும்மாவில் மௌலவி முஃப்தி அப்துல் ஹாதி பாக்கவி அவர்கள், இவர்களைப் பற்றிய நினைவூட்டல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது!

வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்ற சொல் மொழிக்கேற்ப அவர்களின் உதவிகள், தான தர்மங்கள் எண்ணிலடங்காதவை. அதிராம்பட்டினத்துக்கு கிடைத்த பொக்கிஷம் எல்லாம் வல்ல இறைவனின் அழைப்பை
29.1.2026 வியாழக்கிழமை அன்று ஏற்றுக் கொண்டார்கள்!

அவர்கள் படித்த சென்னை புதுக் கல்லூரியிலேயே அவர்களின் ஜனாஸா தொழுகையும், தேதி 30.1.2026 வெள்ளிக்கிழமை அன்று காலையில் நடைபெற்றதும் அதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு.

அவர்களின் மறுமைக்காவும், அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையற்களுக்காவும் அதிகமாக துஆ செய்யுங்கள். அவர்களின் குடும்பத்தினருக்காகவும் அதிகம் துஆ செய்யுங்கள். நமது சமூகம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பேணும் உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். உலகக் கல்வியிலும் மார்க்க கல்வியிலும் தொழில்துறை சார்ந்தவைகளிலும் நாம் எவ்வாறு முன்னேற்றம் அடைந்து காணப்பட வேண்டும் என்பதை அவர்களுடைய வாழ்க்கையில் சிறந்த ஆளுமைகளாக சிறந்து விளங்கி உள்ளார்கள்!

இவர்களைப் போல் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினரை சிறந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாக்கிட வேண்டும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை இன்ஷா அல்லாஹ் இவர்களைப் போல் வாழ்க்கையில் முன்னேற வைப்பதற்கு விழிப்புணர்வுகளை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்!

Prayer Times

Advertisement