அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண் 1,2 ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் K.M.A நிஜாம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்ட தாசில்தார் அவர்களிடம் முறையாக மனு அளித்து அதற்காக போராடியும் வருகிறார்! அம்மனுவில் அதிரை நகரம் வல்லியம்மை தெரு (வைத்திலிங்கம் கடை) முதல் வண்டிப்பேட்டை முக்கம் (பாலுச்சாமி டீக்கடை) வரையில் அதிரை நகராட்சிக்கு சொந்தமான சாலையில் ஆக்கிரமிப்பு நிறைய நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது, மேலும், இம்மனுவை பெற்ற அரசு அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பகுதில் முக்கிய சாலையான CMP லைன் சாலை 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டு தற்போது சாலையே இல்லாத அவல நிலையை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்ற வேலையில்,
இச்சாலைக்காக வேண்டி பல முறை அரசு உயர் அலுவலர்களிடம் மனு அளித்தும் பலனில்லை,
எனவே!.கூடிய விரைவில் மாபெரும் மறியல் போராட்டம் இச்சாலைக்காக வேண்டி நடத்தப்படும் என சமூக ஆர்வலர் K.M.A நிஜாம் தெரிவித்துள்ளார்.
I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?