அதிரையிலும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வாங்குவதற்கு தடை..!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

அதன்படி கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கேன்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அதிரையில் இயங்கும் பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று அதிரை பெட்ரோல் பங்கு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

1 Comment
  • Britneyt
    Britneyt
    June 29, 2024 at 12:14 am

    Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders