பெற்றோர்களின் கவனக்குறைவு : ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் அணைத்து பள்ளிகளிலும் அதிரையை சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர், மேலும் 18 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிறார்கள் என தெரியவருகிறது, சில பள்ளிகளில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை பள்ளி பலமுறை கண்டித்தும் மாணவர்கள் அதனை பொறுப்படுத்தாமல் வாகனங்களை பள்ளிகளுக்கு அருகில் மறைத்து வைத்துவிட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் நேற்று மாலை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பள்ளியில் படித்து வரும் அதிரையை சார்ந்த மாணவர்கள் பள்ளி முடிந்ததும் ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று மாணவர்கள் அதிவேகத்துடன் கையில் பள்ளி பை களை வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

இதனை அதிரை பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

இவ்வாறு நடப்பது பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்கிறதா? அல்லது தெரிந்தும் இவ்வாறு கவனக்குறைவால் விட்டுவிடுகிறார்களா?

மேலும் காவல் துறையினர் இதில் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? காவல் துறையினர் இதில் கவனம் செலுத்தினால், இவ்வாறு நடைபெறாது!

மேலும் பெற்றோர்களே, இதில் சற்று கவனம் செலுத்தி முறையான ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு வாகனங்களை கொடுங்கள்.

பள்ளிகளும் இதில் அதிகம் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Abdullah
Abdullah
2 years ago

Dedicated to Times of Adirai admin Hashim

Debrat
Debrat
1 year ago

Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x