சமீபத்தில் அஇஅதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
முன்னால் அமைச்சர் அவர்களை அதிராம்பட்டினம் திமுக கிழக்கு நகர செயலாளர் திரு ராம குணசேகரன் மற்றும் நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ் தாஹிரா அப்துல் கரீம், சமீபத்தில் அஇஅதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்ட அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர், முன்னாள் அமைச்சர் திரு வைத்தியலிங்கம் அவர்களை அவர்களது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் மரைக்கா கே.இத்ரிஸ் அகமது, ஜனாப். பாஸித் மற்றும் நகர கழக இளைஞர் அணி செயளாலர் மைதீன் பிச்சைகனி மற்றும் நிறுவாகிகள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.








