ஆற்றில் குளிக்க சென்ற இருவர் பலி! அதிராம்பட்டிணம் – முத்துப்பேட்டை அருகில் நடந்த சோகம்..

Mohamed Zabeer
1 Min Read
V Solutions GIF

அதிராம்பட்டினம் இருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் இருக்கும் நசுனீ ஆற்றில் வெள்ளிக்குச்சி ஊரை சார்ந்த வீர முத்து (19) மற்றும் நித்திஸ் (16) ஆகிய 2 சகோதரர்கள் குளிப்பதற்காக இன்று மதியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து திடிரென்று 2 சகோதர்களும் காணவில்லை, உடனடியாக தீயணைப்பு படைகள் தீவரமாக தேடிவந்த நிலையில் வீர முத்து (19) கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது, மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்பு படைகள் தீவரமாக ஈடுபட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின்பு நித்திஸ் (16) கண்டெடுக்கப்பட்டார். இருவரையும் அதிரை GH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டனர்.

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
1 Comment