அதிரையர்களை சுமந்து வரும் சிறப்பு ரயில் – உற்சாகமாக பெருக்குடன் அதிரை பயணிகள்!

16 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் தாமதமாக செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது. நேற்று (24/08/22) இரவு குண்டூர் சந்திப்பு, தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் ஆகஸ்ட் 25 காலை தாமதமாக 10:40 மணிக்கு வந்தடைந்தது. எழும்பூர் ரயில் நிலையத்தில்15 நிமிடம் காத்து இருந்தது, இந்த ரயிலில் அதிரையை சார்ந்த 70+ மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை வழியாக திருவாரூர் 03:15 மணிக்கு, திருத்துறைப்பூண்டி 03:58 மணிக்கு அதிராம்பட்டினம் 04:34 மணிக்கு பட்டுக்கோட்டை 04:50 அறந்தாங்கி 05:50 மணிக்கு காரைக்குடி 07:10 மணிக்கும் சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் வழியாகவும் ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை இரவு 11:40 மணிக்கு இராமேஸ்வரம் சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிரையர்களை வரவேற்க உற்சாகத்துடன் அதிரை பொதுமக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

1 Comment
  • Juliett
    Juliett
    June 28, 2024 at 3:36 pm

    Fantastic perspective! The points you made are thought-provoking. For additional insights, check out this link: FIND OUT MORE. What do others think about this?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders