வருடம் வருடம் ஒவ்வரு மாவட்டம் வாரியாக இஜ்திமா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கொரோனா தோற்று காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டதின் இந்த ஆண்டிற்கான இஜ்திமா அதிராம்பட்டினத்தில வருகின்ற 26/08/2022 அன்று அஸர் முதல் 27/08/2022 அன்று இஷா வரை பெரிய ஜூம்ஆ பள்ளியில் நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த இஜ்திமாவிற்கு நமதூரை சுற்றியுள்ள 40+ மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் நகரங்களில் இருந்தும் தலை சிறந்த ஆலிம்கள் உலமாக்கள், பொறுப்புதாரிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள்கள் வருகை தர இருக்கிறார்கள்.
ஆகையால் நமதூரை சார்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் இந்த இஜ்திமாவில் முழுமையாக கலந்துகொண்டு, மேலும் டோக்கன் முறையில் ஒவ்வரு ஊருக்கும் நான்கு வேலை உணவுக்கு தனி தனி மெஸ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்த அந்த முஹல்லாவில் அதிரை மெஸ் உணவு டோக்கன் களை பெற்றுக்கொண்டு இந்த இஜ்திமாவை சிறப்பிக்கும் மாறும் இதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நன்மைகளையும் அடையும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பெரிய ஜூம்ஆ பள்ளி முஹல்லாஹ் இளைஞர்கள் நடைபெற இருக்கின்ற இஜ்திமாவை முன்னிட்டு பெரிய ஜூம்ஆ பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு பள்ளியை தயார்நிலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இஜ்திமாவை அல்லாஹ் பொருந்தி கொண்டு இதன் மூலம் நமதூருக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்!
Wonderful perspective! The points you made are very enlightening. For further information, visit: DISCOVER MORE. Excited to hear your views!