அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில்,
புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா,
புதிய பாதை திறப்பு விழா, மாணவர் வழிகாட்டி புத்தகம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளி ஆட்சி மன்றக் குழுவின் தலைவர் அப்துல் ஹாதி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளரும் எம் கே என் மதரசா டிரஸ்ட் செயலருமான எஸ் முகமது மீரான் சாகிப் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அஜ்முத்தீன் வரவேற்றார்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, புதிய பாதையினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் திமுக கலை இலக்கியக் கழக செயலாளருமான பழஞ்சூர் செல்வம், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்து, வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியர் எம். உமர் பாரூக் தொகுப்புரையாற்றினார். அதிரை நகர் மன்ற தலைவர் தாஹிரா அப்துல் கரீம் துணை தலைவர் ராம குணசேகரன் எம் கே என் டிரஸ்ட் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழிகாட்டி புத்தகமும் வழங்கப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.



Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?