அல்லாஹ்வின் பேருதவியால் 15 வருடங்களுக்கு பிறகு சென்னை அதிராம்பட்டினம் வழியாக வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக ரமேஸ்வரம் வழியாகவும், ரமேஸ்வரத்திலிருந்து அதிராம்பட்டினம் வழியாகவும் ரயில் சேவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வாரந்தோரும் தொடங்க இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அதிரையிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை பகல் 1:29 மணிக்கு வந்து 1:30 மணியளவில் ரயில் புறப்படும். இன்ஷா அல்லாஹ் ரயில் பிரயாணிகளின் நலன் கருதி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் 12:35 மணிக்கு பயான் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து 1:05 மணிக்குள் முடிவடைந்து விடும். பயணிகள் ஜும்மா முடிந்த உடன் ரயில் நிலையத்தை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம். பொது மக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!