10/08/2022 இன்று 11:30 மணிக்கு அதிரைக்கு வருகை தந்த பட்டுக்கோட்டை MLA அண்ணாதுரை அவர்களை CMP லைன் தெரு வாசிகள் மற்றும் CMP லைன் வார்டு கவுன்சிலர் அஸ்லம் அவர்களும் MLA வை சந்தித்து மனு வழங்கினர்.
CMP லைன் பகுதியில் சீரான ரோடு போடு தருமாறு CMP லைன் மக்களின் பல நாள் கனவாக இருந்துவருகிறது.
CMP லைன் சார்ந்த பல சமூக ஆர்வலர்கள் இதற்காக பல மனுக்கள் வழங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் CMP லைன் பகுதியில் சீரான மின் சாரம் இல்லாமலும் இருந்துவருகிறது, அடிக்கடி பீஸ் போவதும், வயர்கள் அறுந்து விழுவதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆகையால், இதை அனைத்தையும் மனுவில் எழுதி CMP லைன் பொதுமக்கள் கையெழுத்து இட்டு MLA அண்ணாதுரை அவர்களிடம் வழங்கினார்கள், அதனை பெற்றுக்கொண்ட MLA அண்ணாதுரை அவர்கள் வருகின்ற அக்டோபர் மாதம் 1 KM அளவிற்கு CMP லைன் பகுதியில் சாலை அமைத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார், மேலும் மின்சாரம் பிரச்சனையும் சீரமைத்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
This article was a fantastic blend of information and insight. It really got me thinking. I’m looking forward to hearing what others think. Check out my profile for more engaging discussions.