அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் ‘தி ஆக்ஸ்போர்டு அறக்கட்டளை’ (The Oxford Trust) சார்பில் இயங்கி வரும் ‘அவிசோ மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தின்’ புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இக்காப்பகத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த ஜனாப். S.S. முஹம்மது ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு இப்பகுதிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது. அன்னாரின் மறைவுக்குப் பிறகு, காப்பகத்தின் சமூக நற்பணிகள் எவ்விதத் தொய்வுமின்றித் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், அறக்கட்டளையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிறப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அறக்கட்டளை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்:

 தலைவர்: ஜனாப். A. ஹாஜா அலாவுதீன், M.Sc.

 துணைத் தலைவர்: Er. J. ரியாஸ் அஹமது, B.E.

 செயலாளர்: S. ஹுமைரா பானு

 பொருளாளர்: A. ரஹ்மத்

 காப்பக மேலாளர்: திரு. S. முஹம்மது ஜாவித், M.Com.

 அறங்காவலர்: M. அபுபக்கர், B.E.

மேலும், ஏற்கனவே சேவையாற்றி வரும் அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்களது நற்பணிகளைத் தொடர்வார்கள் எனவும், காப்பகத்தின் பணிகளை மென்மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய உறுப்பினர்கள் சிலர் அறக்கட்டளையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்காப்பகம் தொடர்ந்து சிறப்பாக இயங்கவும், இங்கு தங்கியுள்ள சிறப்பு நபர்களின் வாழ்வாதாரம், மறுவாழ்வு மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அனைவரும் தங்களின் மேலான ஆதரவையும், தாராளமான உதவிகளையும் வழங்கிட வேண்டும் எனப் புதிய நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முகவரி & தொடர்புக்கு:

அவிசோ மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் (AWISO), ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம்.
தொடர்பு எண்: +91 97881 94182