அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரே இன்று (07-10-2026) புதன்கிழமை மாலை சுமார் 4:15 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முதற்கட்ட தகவலின்படி, இன்று காலை தொட்டியம் பள்ளி கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒரு சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாலை சுமார் 4:40 மணியளவில் காவல் ஆய்வாளர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் நிலையில், மேலும் தகவல்கள் தெரியவரலாம்.