தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டது! நாளை முதல் நோன்பு என அறிவிப்பு!

ஹிஜ்ரி 1447 ரமலான் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 18.02.2026 புதன் கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில் 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது..

ஆதலால் ரமளான் மாதம் தொடங்கிவிட்டது. நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Prayer Times

Advertisement