அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. நேற்று முந்தைய தினம் இருசக்கர வாகனம் மோதி ஒரு நபர் உயிரழந்த நிலையில், இன்று அதே போன்று இருசக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவருக்கு கடும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல நபர்களுக்கு உடல் உறுப்பு இழப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது கவலையளிக்கிறது. நடைபெற்ற சாலை விபத்துக்கள் பெரும்பாலும் குறித்த வயதுடைய இருசக்கர வாகன ஓட்டிகளால் நடந்து வருவதை பார்க்கும் போது, இதன் பின்னணியில் வேற ஏதேனும் போதை கும்பலின் சதி இருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டினை மக்கள் மத்தியில் எழுப்புகிறது.
ஆகவே காவல்துறை இது விஷயத்தில் தலையிட்டு அதிரை மக்களின் உடல் மற்றும் உயிரினை காக்கும் பொருட்டு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.