அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் நடத்திய 11 நாட்கள் போராட்டத்திலும் சுமூக பேச்சு வார்த்தையிலும் வெற்றி பெற்று இமாம் ஷாபி பள்ளியின் பூட்டையும் சீலையும் அகற்றச் செய்தனர்.
இதை எதிர்த்து நகராட்சிக்கு ஆதரவாக இந்து முன்னணி போராட்டம் நடத்த முடிவு செய்தது. அவர்கள் அடித்த போஸ்டரில் நகராட்சிக்கு சொந்தமான வானொலி பூங்காவை மீட்டு தராத உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று (23-01-2024) 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் என இருந்தது.
ஆனால் இதற்கு அதிராம்பட்டினம் காவல் நிலையம் அனுமதி அளிக்கவில்லை. அதை மீறி அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்டில் பத்து பேர் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.



Great read! The author’s analysis was spot-on and thought-provoking. I’m looking forward to hearing what others think. Feel free to visit my profile for more discussions.