மிக்ஜாம் புயல் எதிரொலி! வழிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம்…

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 3rd December 2023, 12:26 am

சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மிக்ஜாம் புயலாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மழை நேரத்தில், மின் கசிவு, மின் அதிர்ச்சி தொடர்பான புகார்களுக்கு மின்வாரியத்தின் சேவை மையத்தை பொதுமக்கள் அணுக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மின்சாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் :

1) மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

2) சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

3) தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

4) ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

5) மின்வயர் இணைப்புகளை திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிபுற மின் காப்பு செய்யவும்.

6) வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

7) மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது மின் வாரியத்தின் 24 மணி நேர சேவை எண். 94987 94987ஐ தொடர்பு கொள்ளவும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!