சந்திராயன்- 3 வெற்றியை தேசியக் கொடி ஏற்றி கொண்டாடிய அதிரை இமாம் ஷாஃபி பள்ளி!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 25th August 2023, 12:02 pm

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் நேற்று 24/08/2023 காலை வழிப்பாட்டு கூட்டத்தில் சந்திராயன்- 3 நிலவில் வெற்றிகரமாக இறங்கியதை பெருமைப்படுத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாக, பள்ளியின் தாளாளர் அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிறகு, தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர், நமது பள்ளியின் தாளாளர் அவர்கள் மாணவர்களிடத்தில் சந்திராயன்-3 பற்றி உரையாற்றினார்.

அதில், சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கிய இடத்தை லேண்டிங் இமேஜர் கேமரா (Landing Imager Camera) மூலம் படம்பிடித்து அனுப்பியுள்ளதையும் நிலவின் சமதளத்தைத் தேர்வு செய்து, சந்திராயன்-3 தரையிறங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளதையும் லேண்டரில் இருந்து பிரக்ஞான் ரோவர், தற்போது சாய்வுக்கதவு வழியாக வெளியேறி தரையைத் தொட்டுவிட்டதாகவும் கூறிய பின், விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் மென்மையாகத் தரையிறங்கி, சுமார் நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு நடக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்ததையும் விளக்கினார்.

இத்துடன் விஞ்ஞானிகளாக நீங்கள் மாறி நாட்டுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிலவில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடுகளில், நமது இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்றும், இஸ்ரோ விஞ்ஞானிகளில் சாதனையை நிகழ்த்துபவர்கள் வரிசையில் பெரும்பாலானோர் நம் தமிழர்களே என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அது மட்டுமின்றி, நமது பள்ளியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை அல்ஃபஜிர் கிளப் (Alfajir Club) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், இன்று வருகை தந்த 16 மாணவர்களிடமும் சந்திராயன் – 3 பற்றியும் விஞ்ஞானம் குறித்தும் புதிய புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டதாகக் கூறினார். அந்த விவரங்களை வழிபாட்டுக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் A. Abdul Latheef சக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இது போன்ற ஊக்கமூட்டும் புதுமையான செயல்களை நமது பள்ளி, ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது என்பதையும், வட்டார அளவில் நடந்த கால் பந்து விளையாட்டுப் போட்டியில் சீனியர் நிலையில் நமது பள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதையும் பள்ளியின் முதல்வர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நமது கல்வி சேவை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்தித்து கூடி இருந்த பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter