கோப்பையை கைப்பற்றியது அதிரை ESC அணி!! நிறைவு பெற்றது SSMG தொடர்!!

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் பல கலந்துகொண்டனர். இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராயல் FC அதிரை அணியினரும் ESC அதிரை அணியினரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21/07/2023) மாலை நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ESC அதிராம்பட்டினம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு அதிரை சாரா திருமண மண்டபத்தில் தொடங்கி, மைதானம் வரை நடைபெற்றது. பேண்டு வாத்தியங்கள், வானவேடிக்கைகள் முழங்க நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சுழற்கோப்பையுடன் வீரர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்நது நடைபெற்ற இறுதி ஆட்டத்தை அதிராம்பட்டினம் நகரமன்ற தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ESC அதிரை அணிக்கு ரூ. 50,000 மற்றும் சுழற்கோப்பை, வெற்றி வாய்ப்பை இழந்த ராயல் FC அதிரை அணிக்கு ரூ. 30,000 மற்றும் சுழற்கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

மேற்கண்ட பரிசுகளுடன் நடுவர்களுக்கான பரிசு, சிறந்த வீரர்களுக்கான பரிசு உள்ளிட்டவைகளும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்w நகரமன்ற தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினரும் இளைஞர் கால்பந்து கழக செயலாளருமான செய்யது முஹம்மது, 23வது வார்டு நகரமன்ற உறுப்பினரும் இளைஞர் கால்பந்து கழக தலைவருமான SSMG. பசூல்கான், அனைத்து முஹல்லா zதலைவர் PMK. தாஜுதீன், கடற்கரைத்தெரு ஜமாஅத் தலைவர் VMA. அஹமது ஹாஜா, 11வது வார்டு நகரமன்ற உறுப்பினர் NKS. முஹம்மது ஷரீப், காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர், இளைஞர் கால்பந்து கழக நிர்வாகிகள் ஹனி ஷேக், ரஃபீக், சேக்தம்பி, ஜமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times