அதிரையில் நாளை முதல் துவங்குகிறது புனித புஹாரி ஷரீஃப்!!

அதிராம்பட்டினம் ஜாவியாவில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் – பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பாகிய – புனித புஹாரி ஷரீப், அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை 29-ல் (19.06.2023) திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில், கண்ணியத்திற்குரிய அல் உஸ்தாதுல் முகர்ரம்- மௌலானா K.T. முஹம்மது குட்டி ஹஜ்ரத் கிப்லா (முதல்வர் அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி – அதிராம்பட்டினம்) அவர்கள் முன்னிலையில் தொடங்கப்படும்.

40 நாட்கள் நடைபெறும் இந்த மஜ்லிஸில் ஒவ்வொரு நாளும் காலை 7:45 மணி முதல் பயான் நடைபெறும். 7:45 மணிக்கு கேட் பூட்டப்படும். பயானுக்குப்பின் நமது ஈருலக வாழ்வின் வெற்றிக்காகவும், எல்லா நன்மைகளுக்காகவும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் துஆ ஓதப்பட்டு நார்ஸா வழங்கப்படும்.

குறிப்பு: வழக்கம் போல் சுப்ஹுத் தொழுகைக்கு பிறகு திக்ர் மஜ்லிஸும் நடைபெறும்.

துல்ஹஜ் பிறை 9, 10 மற்றும் முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய 4 நாட்களும் மஜ்லிஸுக்கு விடுமுறை விடப்படும்.

மஜ்லிஸிற்கு நன்கொடை வழங்குபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா கமிட்டி 1, ஜாவியா ரோடு, அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு : 6385238755, 9800120281

1 Comment
  • Jocelynt
    Jocelynt
    June 29, 2024 at 12:04 am

    Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders