சில நாட்களுக்கு முன் 2 வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அஸ்லம், அதிரை நகராட்சி ஆணையருக்கு ஒரு மனு அளித்துள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய அதன் 2வது வார்டில் பெரும்பாலும் மணல் சாலைகள் மட்டுமே உள்ளன கழிவுநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் இங்கு அறவேயில்லை. இதனால் 2வது வார்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக மழை பெய்யக்கூடிய சமயத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அங்குள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகின்றது.
எனவே அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து உடனடியாக பணிகளை துவங்கி 2வது வார்டு மக்களின் குறைகளை தீர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் இன்று நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் பேசப்படும் விவகாரங்களில் 2 வது வார்டு தொடர்பாக எந்த அஜெண்டாவும் இல்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளார் 2 வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அஸ்லம் அவர்கள்…
Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/join?ref=P9L9FQKY