இன்று கல்லூரியில் துணைப் பேராசிரியர்களுக்கான நேர்காணல் ( Interview) அதில் உள்ள 5 தேர்காணல் செய்பவர்களில் நானும் ஒருவர்.
நான் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் நான் அவர்களின் ஆங்கில இலக்கியத்தில் பெற்ற சதவீதத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது ஏனென்றால் நிறையபேர்கள் First class with distinction என்று இருந்தது. அவர்களின் சுய அறிமுகம் செய்து கொண்டபிறகு. அவர்கள் தாங்கள் தயார் செய்து கொண்டு வந்த கவிதையான Dust of snow என்கிற Frost ன் கவிதையையே நடத்த ஆரம்பித்தார்கள். அது Frost எழுதிய மிகச் சிறிய கவிதை இயற்கை நமக்கு மிகச்சிறந்த கருத்தை சொல்ல கூடிய கவிதை அதை ஒரு வரியில் சொல்வதென்றால் வாழ்க்கையில் சிறியது ,பெரியது என்று எதுவும் இல்லை.
நாம் அற்பமானது என்று நினைக்கும் எதுவும் மிகப்பெரிய நேர்மறையான விளைவுகளை நம்மிடையே ஏற்படுத்தும் சொல்லும் ஓர் அற்புதமான கவிதை. இதை நடத்திய அந்த நபர் நான் எழுதியுள்ள இந்த மைய கருத்தை சொல்லவேயில்லை. அதே போல் தான் இன்னொரு நபரும் இவர் Poison tree எனக்கு 8 வரிகள் தான் தயார் செய்துள்ளேன் என்றார் அதை நடத்துங்கள் என்றதும் அதைச் சொதப்பியதைப் பார்க்கும்பொழுதும் மற்றும் மற்றொரு பேராசிரியர் தான் Gitanjali யில் நான் ஒரு கவிதை நடத்து கிறேன் என்றார். Tagore எழுதிய வேறு சில நூல்கள் பற்றி ஏதாவது தெரியுமா? என்றால் அதற்கு அவர் இதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது என்றார். நான் இலக்கணம் பற்றி என்றவுடன் என் சக பேராசிரியர், ” சார் இவர்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது வேண்டாம் என்றார். இவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிக்கான தகுதி படைத்தவர்கள். எப்படியுள்ளது இன்றைய தலைமுறை! ஆசிரியர்களின் வாசிக்கும் பழக்கம்.
இதில் எப்படி இன்றையப் பள்ளிக்கூட மாணவர்கள் ஆங்கிலத்தில் 100/100 எல்லாம் பெற முடிகிறது! இவ்வளவு Insufficient knowledge in English ல் இருந்து கொண்டு இதில் முனைக்கு முனை கட்அவுட்கள் வேறு.இதற்கு ஆயிரம் வாழ்த்துகள். மார்க்கைப் பிரதானமா கொண்டு இயங்கும் கல்விச் சாலையில் அந்தக் கல்வியால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது.
கல்வி என்பது சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது ஆனால் இங்கு rote memorization ஐ செய்யவைத்துச் சிந்திக்கும் ஆற்றலை மக்கச் செய்வது. இந்த மார்க்காலும் இந்த கல்வியாலும் ஒரு பயனும் இல்லை.
இதில் இன்னும் ஒரு கூத்து ஒரு மாணவி 600க்கு 635 வாங்கியுள்ளார். ஒரு கேள்விக்கு என்ன மார்க் என்று தெரியாமலே திருத்தும் ஆசிரியர்கள் இங்கு தான் உண்டு.
கைடு மட்டும் விற்கவில்லையென்றால் ஒரு மாணவனும் பாஸ் ஆகமாட்டான் என்பது நிச்சயம். இந்த மெகாலே கல்வி முறை மாறவேண்டும். இது படித்த முட்டாள் களைத்தான் உருவாக்கிறது.
ஆசிரியர்களுக்கும் இங்கிலாந்தில் உள்தை போல் Evaluation system வரவேண்டும். கைடுகளைத் தடை செய்ய வேண்டும். Valuation கடுமையாக்க வேண்டும். இதெல்லாம் அரசு செய்யுமா?
முகநூலில் பதிவு
H.K. Amanullah
This article was a fantastic blend of information and insight. It really got me thinking. Let’s dive deeper into this topic. Click on my nickname for more thought-provoking content!