திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும், அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்படலாம் என தகவல் வெளியானது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 1-ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்ப அலை வீசி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்களுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறியாத பட்சத்தில் பள்ளி திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டபடி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் ஜூன் 5ஆம் தேதியும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்பதை அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times