10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/500 பெறவில்லை..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை.

இதில் சென்னை 89.14 சதவீதம், செங்கல்பட்டு 88.27%, திருவள்ளூர் 88.80 சதவீதம், ராணிப்பேட்டை 83.54 சதவீதம் மற்றும் காஞ்சிபுரம் 90.28% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரம்பலூர் 97.67%, சிவகங்கை 97.53% மற்றும் விருதுநகர் 96 புள்ளி 22 சதவீதம் என மூன்று மாவட்டங்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் ஒருவர் கூட 500க்கு 500 மதிப்பெண் பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து அசத்தினார். அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 500 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் ஒருவர் கூட இந்த இலக்கை எட்டவில்லை.

1 Comment
  • Candyt
    Candyt
    June 29, 2024 at 1:31 am

    Very informative and funny! For those curious to know more, check out: FIND OUT MORE. Let’s discuss!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders